வெள்ளி, 30 டிசம்பர், 2016

பீம் செயலி எப்படி செயல்படுகிறது?

இது ஆதார் எண்ணை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
ஆண்ட்ராய்டு ப்ளே ஸ்டோரில் இருந்து இந்த செயலியை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வியாபாரிகள் இந்த புதிய செயலியை தங்கள் மொபைல் ஃபோனில் பதிவிறக்கம் செய்வதோடு, பயோமெட்ரிக் பதிவுக் கருவியுடன் இணைக்க வேண்டும். இந்த செயலியில் வாடிக்கையாளர்கள் தனது ஆதார் எண்ணையும், எந்த வங்கி கணக்கில் பணப் பரிமாற்றம் செய்ய வேண்டும் என்பதையும் பதிவிட வேண்டும். விரல் ரேகையே இந்த பரிமாற்றத்திற்கான கடவுச் சொல்லாகப் பயன்படும். இதன் மூலம் ஆதார் எண் கொண்ட அனைவரும் ரொக்கமற்ற பரிமாற்றத்தை செய்ய இயலும். பொருட்களை வாங்கச் செல்லும் போது பணம் செலுத்த போன் வைத்திருக்க வேண்டிய கட்டாயமும் இல்லை.
இந்த செயலி எவ்வாறு செயல்படுகிறது என்பது குறித்து பார்ப்போம்
இந்த செயலியை கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளவும். அதன் பிறகு பயன்பாட்டாளரின் வங்கி கணக்கையும், மொபைல் எண்ணையும் அதில் பதிவு செய்ய வேண்டும். இந்த செயல்பாட்டிற்கு பிறகு நீங்கள் பீம் செயலி மூலம் உங்கள் பரிவர்த்தனையை தொடங்கலாம்.
பீம் செயலியுடன் இணைக்கப்பட்டுள்ள வங்கிகள்:
அலகாபாத் வங்கி, ஆந்திரா வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, பாங்க் ஆப் பரோடா, பாங்க் ஆப் இந்தியா, பாங்க் ஆப் மகாராஷ்டிரா, கனரா வங்கி, கத்தோலிக்க சிரியன் வங்கி, சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா, டிசிபி வங்கி, பெடரல் பாங்க், எச்டிஎப்சி பாங்க், ஐசிஐசிஐ பாங்க், ஐடிபிஐ வங்கி, ஐடிஎப்சி வங்கி, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர் சீஸ் வங்கி, இண்டஸ் இந்த் வங்கி, கர்நாடக வங்கி, கரூர் வைசியா பாங்க், கோடக் மஹிந்திரா வங்கி, ஒரியண்டல் பாங்க், பஞ்சாப் நேஷனல் வங்கி, ஆர்பிஎல்வங்கி, சௌத் இந்தியன் வங்கி, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, சிண்டிகேட் வங்கி, யூனியன் பாங்க் ஆப் இந்தியா, யுனைடேட் பாங்க் ஆப் இந்தியா, விஜயா வங்கி உள்ளிட்ட வங்கிகள் இந்த சேவையை வழங்குகின்றன.
எந்த மொழிகளில் இந்த செயலி உள்ளது?
பிரதமர் மோடி அறிமுகப்படுத்தியுள்ள இந்த புதிய செயலி தற்போது ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளில் மட்டுமே உள்ளது. விரைவில் இந்தியாவில் உள்ள பிற மாநில மொழிகளிலும் அறிமுகப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.