வெள்ளி, 30 டிசம்பர், 2016

அதிக அளவில் வருகிறது புதிய 500 ரூபாய் நோட்டுகள்..!

ரிசர்வ் வங்கியிடம் போதியளவு பணம் கையிருப்பு உள்ளதாகவும், அதிகளவிலான புதிய 500 ரூபாய் நோட்டுகள் விரைவில் விநியோகத்திற்கு வர உள்ளதாகவும் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.
பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் ஏற்பட்டுள்ள பணத் தட்டுப்பாடு முழுமையாக நீங்காத நிலையில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி இன்று செய்தியார்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், அதிகளவிலான புதிய 500 ரூபாய் நோட்டுகள் விரைவில் விநியோகத்திற்கு வர உள்ளதாக தெரிவித்தார்.
மேலும், பண மதிப்பிழப்பு நடவடிக்கையை ஆதரித்த நாட்டு மக்களுக்கு மிகுந்த கடமைப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள அருண் ஜேட்லி, பண மதிப்பிழப்பு தொடர்பான பலன்கள் நன்றாக தெரியத் தொடங்கிவிட்டதாகவும் தெரிவித்தார்.
ராபி கால பயிர் விதைப்பு கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் 6.3 சதவிகிதம் அதிகரித்துள்ளது என அருண் ஜேட்லி கூறினார். நேரடி வரி விதிப்பு 13.6 சதவிகிதமும் மத்திய மறைமுக வரி 26.2 சதவீதமும் அதிகரித்துள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.