அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, கோழைத்தனமாக உழவரை தாக்கி இழுத்துச்சென்ற சப் இன்ஸ்பெக்டர் அருனை உழவர் விடுதலைக் கழகம் சார்பாக வன்மையாக கண்டிப்பதோடு, காவல்துறைக்கே கலங்கத்தை ஏற்படுத்திய அருனின் கேடுகெட்ட செயலை நினைத்து வருந்தி தானாக பணியைவிட்டு விட்டுச்செல்ல வேண்டும்.
இன்று மதுரை மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும். தற்கொலை செய்துகொண்ட விவாசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட விவசாயிகள் சென்றுள்ளனர். சென்றவர்களை தடுத்து நிறுத்திய காவல்துறை தன்னுடைய அதிகாரத்திமிரை காட்டியுள்ளது.
இதில் பாதிக்கப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் விவசாயிகள் சங்க மாநில செயற்குழு மூத்த உறுப்பினர் கந்தசாமி (65) அவர்களை மக்கள் மத்தியில் அசிங்கமாக திட்டி, தரதரவென்று இழுத்துச்சென்று அவமானப்படுத்திய குற்றத்திற்கு நஷ்ட ஈடாக ரூ.20 லட்சம் வழங்க வேண்டும்.
கந்தசாமி அவர்கள் " ஏப்பா நான் உன் அப்பா மாதிரி இருக்கேன். உங்களுக்கும் சேர்த்து தானே போராடுகிறோம்" என்றதக்கு நீ ஒன்றும் கிழிக்க வேண்டாம் என்று கூறி அவமானப்படுத்தியதற்கு உடனடியாக பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் மன்னிப்பு கேட்க வேண்டும்.
மதுரை பகுதியில் சல்லிக்கட்டு தடைக்கு எதிராக நடைபெற்றுவரும் போராட்டத்தை திசைதிருப்பும் செயலாகவும் இதை பார்க்க வேண்டியுள்ளதால், இரண்டையும் கவணத்தில் கொள்ள வேண்டும்.
உழவர் சங்கங்கள், இயற்கை வேளாண்மையில் களமிறங்கிய இளைஞர்கள், மனித உரிமை அமைப்புகள், உழவர்கள் மீது அக்கறையுள்ள கட்சிகள் ஐயா கந்தசாமி அவர்களுக்கு நீதி பெற்றுத்தர காவல்நிலையத்தை முற்றுகையிட்டு எதிர்ப்பை பதிவுசெய்ய வேண்டும். இப்பிரச்சனை தொடர்பாக எழும் போராட்டத்தில் என்னை எந்த வகையிலும் ஈடுபடுத்த தயாராக உள்ளேன்.
#ஏனாதி பூங்கதிர்வேல்
உழவர் விடுதலைக் கழகம்,
வாட்சப்: 8344050672
உழவர் விடுதலைக் கழகம்,
வாட்சப்: 8344050672