சனி, 31 டிசம்பர், 2016

மோடிக்கு உ.பியில் ஒரு ஓட்டு கூட கிடைக்காது: சவால் விடும் மம்தா!

உ.பி தேர்தலில் ஆளும் கட்சி கவிழும் சூழல் உருவாகியிருக்கிறது. இது வட இந்திய அரசியலில் மட்டுமல்லாது மொத்த இந்தியாவின் அரசியல் போக்கிலும் ஆழமான பாதிப்பை உருவாக்கும் என்னும் நிலையில், கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பேசிய மம்தா, “சமாஜ்வாதியின் உட்கட்சி விவகாரம், அது குறித்து கருத்து கூற விரும்பவில்லை. ஆனால் யார் வெற்றி பெற்றாலும் பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி என்று எது வெற்றி பெற்றாலும் பாஜக-வுக்கு ஒரு ஓட்டுக் கூட கிடைக்கக் கூடாது. மோடி அரசு மாயவதியை மிரட்டுகிறது.
ரூபாய் நோட்டு நடவடிக்கையை எதிர்ப்போர்களை அவர்கள் மிரட்டுகின்றனர். அவர்கள் பொய்களை பரப்பி வருகின்றனர். கோயபெல்ஸ் கொள்கையில் நம்பிக்கை கொண்டுள்ளனர்.ஒவ்வொரு நாளும் பாஜக தவறுகளைச் செய்து கொண்டே போகிறது. பிஹாரில் தவறிழைத்தனர் அங்கு லாலு, நிதிஷ் கூட்டணி வெற்றி பெற்றது.
ஜெயலலிதா மறைந்து 7 நாட்களுக்குள் தமிழக தலைமைச் செயலாளர் அலுவலகத்தில், வீட்டில் சோதனை நடத்தியுள்ளனர். சந்திரபாபு நாயுடு தனது எதிர்ப்புக் குரலை உயர்த்தினால் அவர் மீது ரெய்டு நடத்துவர்” என்றார் மம்தா.
SOURCE: KAALAIMALAR