வெள்ளி, 30 டிசம்பர், 2016

பணத்தட்டுப்பாடு மோடியை தூக்கிலிட்டு நூதன போராட்டம்..! சேலத்தில் பரபரப்பு..!


ரூபாய் நோட்டு செல்லாது என்று அறிவித்து 50 நாட்களுக்கு மேலாக ஆகியும் பணத்தட்டுப் பாட்டை சரி செய்திடாத மத்திய பாஜக அரசை கண்டித்து, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சேலம் ராமகிருஷ்ணா சாலையில் இருந்து பிரதமர் மோடியின் முக மூடி அணிந்தவர்களை தூக்கில் போடுவதை போன்று சித்தரித்து ஊர்வலமாக வந்த வாலிபர் சங்கத்தினர், அந்த பகுதியில் உள்ள ஸ்டேட் வங்கியின் முன்பு மத்திய அரசை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பண தட்டுபாட்டை சரி செய்திடாமல் இருக்கும் மத்திய அரசுக்கு எதிராகவும், இந்த அறிவிப்பிற்கு பிறகு வங்கியில் வரிசையில் நின்று உயிர் இழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட முழக்கங்களை எழுப்பினர்.
பாதுகாப்பிற்காக காவல்துறையினர் அதிக அளவு குவிக்கப்பட்டு இருந்த நிலையில் அவர்கள் முன்பாகவே, பிரதமரை தூக்கில்  இடுவது போன்று நடைபெற்ற இந்த நூதன போராட்டத்தினால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
source: kaalaimalar.net

Related Posts: