வியாழன், 29 டிசம்பர், 2016

பாஜகவுக்கு எதிராக சமாஜ்வாடி கட்சியுடன் கைகோர்க்க காங்கிரஸ் திட்டம்

உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
​பாஜகவுக்கு எதிராக சமாஜ்வாடி கட்சியுடன் கைகோர்க்க காங்கிரஸ் திட்டம்

மீண்டும் ஆட்சியை கைப்பற்ற பல்வேறு தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறார் உத்தரப் பிரதேச முதலமைச்சர் அகிலேஷ் யாதவ். இதற்காக காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்க அவர் ஆர்வம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. 

இதனிடையே, உத்தரப்பிரதேசத்தில் தனித்துப் போட்டியிடப் போவதாக கூறிவந்த காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியும், சமாஜ்வாதி கட்சியுடன் கைகோர்க்க ஆர்வம் காட்டுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இதற்காக பாஜகவுக்கு எதிராக மதச்சார்பற்ற கட்சிகளை கொண்ட மெகா கூட்டணி அமைக்கவும் இருகட்சிகளும் வியூகம் வகுத்துள்ளதாக தெரிகிறது. எனினும், மொத்தமுள்ள 404 சட்டப்பேரவைத் தொகுதிகளில்  குறைந்தபட்சம் 100 தொகுதிகளை தரவேண்டும் என காங்கிரஸ் கேட்பதால், புதிய கூட்டணி குறித்து இறுதி முடிவு எடுப்பதில் சிக்கல் நீடித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

தேசிய அரசியலை தீர்மானிக்கும் மிக முக்கிய மாநிலமாக கருதப்படும் உத்தரப் பிரதேசத்தில் அடுத்த சில மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது.