வெள்ளி, 30 டிசம்பர், 2016

மம்தா பானர்ஜி நேற்று மாநில அரசு அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகளுக்கு ஒரு உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

"மேற்குவங்க மாநில முதல்–மந்திரி மம்தா பானர்ஜி தொடர்ந்து மத்திய அரசுடன் மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறார். உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகளை மத்திய அரசு சமீபத்தில் வாபஸ் பெற்றதற்கு அவர் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். மேலும்
#மத்திய_அரசுக்கு_எதிராக#எதிர்க்கட்சிகளை_ஒருங்கிணைக்கும்#முயற்சியிலும்_அவர்_ஈடுபட்டு #வருகிறார்.
இந்நிலையில் மம்தா பானர்ஜி நேற்று மாநில அரசு அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகளுக்கு ஒரு உத்தரவு பிறப்பித்து உள்ளார்.
அதில்,,, 
மாநில அரசு குறித்த எந்த தகவலையும் மத்திய அரசுக்கு தெரிவிக்க கூடாது. சட்டம் ஒழுங்கு பிரச்சினை மட்டுமின்றி தீவிரவாத தடுப்பு நடவடிக்கைகளில் கூட மத்திய அரசுக்கு ஒத்துழைக்க வேண்டாம். எந்த ஒரு அவசர தகவலையும் முதல்–மந்திரி அலுவலகத்துக்கோ அல்லது தலைமைச் செயலாளர் அலுவலகத்துக்கோ தான் அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஏற்கனவே 2013–ம் ஆண்டு மன்மோகன் சிங் தலைமையில் மத்திய அரசு இருந்த போதும் இதே போல் ஒரு உத்தரவை மம்தா பானர்ஜி பிறப்பித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Image may contain: 1 person, text