செவ்வாய், 20 டிசம்பர், 2016

பணம் இல்லை…. சூறையாடப்படும் ஏடிஎம் இயந்திரங்கள்… வெகுண்டெழும் மக்கள்


 
பணம் கிடைக்காததால் ஆத்திரம் அடையும் கிராம மக்கள் வங்கிகள் மற்றும் ஏடிஎம்களை சூறையாடும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.
கடந்த மாதம் 8-ம் தேதி கருப்பு பணத்தை ஒழிப்பதாக கூறி மத்திய அரசு பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்தது. இதனையடுத்து பொதுமக்கள் தங்களிடம் இருந்த பழைய ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்தனர்.
இருப்பினும் இன்று வரையில் தேவையான அளவு புதிய ரூபாய் நோட்டுகளை பெறுவதில் பல்வேறு சிரமங்களை எதிர்க்கொண்டு வருகின்றனர். பெரும்பாலான வங்கிகள் மற்றும் ஏடிஎம்கள் பணம் இல்லாத நிலையிலேயே உள்ளது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகிஉள்ளனர்.
இதற்கிடையே பணம் கிடைக்காத ஆத்திரத்தினால் கிராம மக்கள் வங்கிகள் மற்றும் ஏடிஎம்களை சூறையாடும் சம்பவங்கள் நாடு முழுவதும் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.
உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டம் கோரோலி கிராமத்தில் ஸ்டேட் வங்கியில் பணம் இல்லாத காரணத்தினால் அத்திரம் அடைந்த கிராம மக்கள் வங்கியின் மீது கற்களை வீசிஉள்ளனர். வங்கியின் மீது தாக்குதல் நடத்தி அங்கிருந்த பொருட்களை சூறையாடினர்.
இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதேபோன்ற சம்பவம் ஷாமிலி மாவட்டம் பேதாக்பூர் கிராமத்திலும் நடைபெற்று உள்ளது. அங்கு பணம் எடுக்க முடியாததால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் உபி கிராம வங்கியை சூறையாடினர். வங்கிகளில் பணம் இல்லாத காரணத்தினால் ஷாக்பூர் – காந்த்லால் சாலையில் போராட்டம் நடத்தினர். பின்னர் போலீசார் தலையீட்டு நிலையை சரிசெய்தனர். இதேபோன்று ஜலாலாபாத் பகுதியிலும் வங்கியில் பணம் கிடைக்காததால் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குஜராத் மாநிலத்தில் வங்கி கணக்கில் 2000 மட்டும்தான் எடுக்க வேண்டும் என அதிகாரிகள் நிபந்தனை விதித்ததால் கோபம் அடைந்த கிராம மக்கள் இரு வங்கிகளை மூடினர். அமரேலி மாவட்டம் அகாரியா கிராமத்தில் இச்சம்பவம் நடைபெற்று உள்ளது.
நேற்று அகாரியா மற்றும் அதன் சுற்று வட்டாரத்தை சேர்ந்த கிராம மக்கள் தேனா வங்கி மற்றும் பாரத ஸ்டேட் வங்கி கிளையின் முன்னர் போராட்டம் நடத்தினர். போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தாலும் வங்கிகளை கிராம மக்கள் மூடிஉள்ளனர். போலீசார் நிலையானது மேலும் மோசம் அடையாமல் பாதுகாத்தனர். இது தொடர்பாக முறையான புகார் வரவில்லை என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Related Posts: