10 லட்சம் ரூபாய்க்கு மேல் ஆண்டு வருமானம் பெறுபவர்களுக்கு சமையல் எரிவாயு மானியம் நிறுத்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இத்திட்டத்தின் மூலம் 10 லட்சம் ரூபாய்க்கு மேல் ஆண்டு வருமானம் பெறுபவர்கள் குறித்த விவரங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் சமையல் எரிவாயு விநியோக நிறுவனங்களுடன் பகிர்ந்து கொள்ள உள்ளது. 10 லட்சம் ரூபாய்க்கு மேல் சம்பாதிப்பவரின் பெயர் தவிர அவரது தொலைபேசி எண், முகவரி, பான் எண் உள்ளிட்ட விவரங்கள் எரிவாயு விநியோக நிறுவனங்களுக்கு அளிக்கப்பட உள்ளது. மேலும் இந்த தகவல்களை பாதுகாப்பாகவும் ரகசியத்தன்மை காக்கும் வகையிலும் பகிர்ந்து கொள்வது தொடர்பாக நிதி மற்றும் பெட்ரோலிய அமைச்சகம் விரைவில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ள உள்ளன.
இத்திட்டத்தின் கீழ் உயர் வருவாய் பிரிவினர் சமையல் எரிவாயு மானியம் பெறுவதை கண்டுபிடித்து மானியத்தை ரத்து செய்ய எரிவாயு விநியோகஸ்தர்களுக்கு வருமானவரித்துறை அறிவித்திருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.
பதிவு செய்த நாள் : December 20, 2016 - 11:37 AM