
நேற்று இரவு 11 மணிக்கு நெல்லை எக்ஸ்பிரஸ் இரயில் எக்மோரில் புறப்பட்டது. கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து காலை 8:30 மணிக்கு வெற்றிகரமாக கூடுவாஞ்சேரி இரயில நிலையம் வந்தடைந்தது. இரயிலில் இருப்பவர்கள் எல்லாம் நெல்லைதான் வந்துவிட்டது என்று எழுந்து பார்த்தவர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி.
நடந்து சென்றிருந்தால் கூட செங்கல்பட்டு தாண்டி போயிருக்கலாம்.
கூடுவாஞ்சேரி இரயில் நிலையத்தில் எந்த ஒரு கடையும் இல்லை. இரயிலில் இருப்பவர்கள் அனைவரும் வெளியே அழைந்து திரிந்து பார்த்துவிட்டார்கள். எங்கேயும் எந்த கடைகளும் இல்லை. கைக்க்குழந்தைகள் கர்ப்பினிகள் அனைவரும் தவித்துக் கொண்டிருந்த நேரம் அது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மாவட்ட நிர்வாகிகளுக்கு போன் செய்து நிலைமையை கூறினேன்.
108 ஆம்புலன்ஸை விட விரைவாக வந்து அங்குள்ள அனைவருக்கும் பிஸ்கட் பாக்கெட் பிரட் போன்றவற்றை விநியோகம் செய்தார்கள்.
அவர்களின் பணியை பார்க்கும் பொழுது மேனியெல்லாம் சிலிர்த்துவிட்டது.
1000 ரூபாய் கொடுத்து அரசை நம்பி இரயிலில் பயணம் செய்கிறோம். ஆனால் இரயிலில் உள்ள பயணிகள் குழந்தைகள் கர்ப்பினிகள் அனைவருக்கும் பொறுப்பேற்றுள்ள அரசிற்கு கூட வராத எண்ணம் என் சகோதரர்களுக்கு வருகின்றதென்றால் இதற்கான கூலி முழுமையாக மறுமையில் அவர்களுக்கு கிடைக்க ஏக இறைவனை பிரார்த்திக்கின்றேன்.