ரூ 500, 1000 செல்லாது என்ற அறிவிப்பை தொடர்ந்து டிசம்பர் 30ம் தேதி வரை தங்களிடமுள்ள நோட்டுகளை வங்கியில் டெபாசிட் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து நாடுமுழுவதும் வங்கியில் பணத்தை டெபாசிட் செய்யவும், வங்கியில் பணத்தை எடுக்கவும், ஏ.டி.எம்.,களில் பணத்தை எடுக்கவும் கடும் சிரமப்படுகின்றனர்.
பெரும்பாலான வங்கிகளில் பணம் இல்லை என்ற அறிவிப்பு மக்கள் மத்தியில் பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில், நேற்று ரிசர்வ் வங்கி வெளியிட்ட செய்தியில், ஒருவருடைய வங்கிக்கணக்கில் அதிகபட்சம், ரூ.5000 மட்டுமே செலுத்த முடியும்.
அதற்கு மேற்பட்ட தொகையை ஒருமுறை மட்டுமே செலுத்த முடியும். அதுவும், இதுவரை அந்த தொகையை செலுத்தாமல் இருந்ததற்கான காரணத்தை தெரிவித்த பின்னரே செலுத்த முடியும்.
அதை வங்கிகள் பதிவு செய்து, விசாரணை நடத்திய பின்னரே, அந்தத் தொகையானது, வங்கிக் கணக்கில் இருப்பு வைக்கப்படும் என தெரிவித்திருந்தது.
இது தொடர்பாக மத்திய நிதிஅமைச்சர் அருண்ஜெட்லி கூறுகையில்,‘‘ பழைய ரூபாய் நோட்டுகள் வைத்திருப்பவர், அதனை எதற்கும் பயன்படுத்த முடியாது.
வங்கியில் மட்டுமே டிபாசிட் செய்ய முடியும். நபர் ஒருவர், எவ்வளவு பணம் எடுத்து சென்று டிபாசிட் செய்ய சென்றால், அவரிடம் கேள்வி எதுவும் வராது.
எனவே, பணத்தை ஒரு முறை டிபாசிட் செய்ய ரூ.5000 என்ற வரையறை பொருந்தாது. ஆனால், கொஞ்சம் பணத்துடன், ஒரே நபர் தினமும் சென்று டிபாசிட் செய்தால்,
அது சந்தேகத்தை ஏற்படுத்தும். அவர் பணம் எங்கிருந்து பெற்று வருகிறார் என்ற கேள்வி வருகிறது.
இந்த நேரத்தில் அவர் மீது சந்தேகம் ஏற்படுகிறது. எனவே, யார் எவ்வளவு பழைய ரூபாய் நோட்டுகளாக பணம் வைத்திருந்தாலும், அதனை உடனே சென்று டிபாசிட் செய்யுங்கள் என தெரிவித்தார்.
ரிசர்வ் வங்கியும் மத்திய அரசும் மாற்றி, மாற்றி அறிக்கை விட்டு பொதுமக்களை குழப்பி வருகின்றனர்.
source; kaalaimalar