திங்கள், 9 ஜனவரி, 2017

பணமதிப்பிழப்பு நடவடிக்கை: பிரதமருக்கு சம்மன் அனுப்ப வாய்ப்பு

பணமதிப்பிழப்பு விவகாரம் தொடர்பாக ரிசர்வ்வங்கி ஆளுநர் அளிக்கும் பதில் திருப்தி அளிக்கவில்லை எனில், பிரதமரிடம் விளக்கம் கேட்க நாடாளுமன்ற பொதுகணக்கு குழு முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக ரிசர்வ் வங்கி தரப்புக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பி நாடாளுமன்ற பொதுக்கணக்குக் குழு சம்மன் அனுப்பியுள்ளது. நாடாளுமன்ற குழு முன் வரும் 20ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேலுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவர் கே.வி.தாமஸ் தலைமையிலான பொதுகணக்குக் குழு அனுப்பிய கேள்விகளுக்கு ஆர்பிஐ தரப்பில் இருந்து இதுவரை பதில் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக ஆர்பிஐ அளிக்கும் பதில்கள் தொடர்பாக 20ம் தேதி நடக்கும் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்படும் என்றும் குழுவின் தலைவர் கே.வி. தாமஸ் தெரிவித்துள்ளார். ஆர்பிஐ அளிக்கும் விளக்கத்தில் திருப்தி இல்லை என்றால் பிரதமர் மோடியை நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு சம்மன் அனுப்ப இருப்பதாகவும் தாமஸ் தெரிவித்தார்.

Related Posts: