ஞாயிறு, 29 ஜனவரி, 2017

‘பன்றி மரபணு’ மாட்டுப் பால் விற்பனை? மக்களே உஷார்!


ஜல்லிக்கட்டு பிரச்சனை தொடர்பாக தமிழகத்தில் நாட்டு மாடுகள் மீது அபரிமிதமான பாசமும், அவற்றிற்கு தனித்தன்மையை நிரூபிக்கும் வகையிலும் தற்போது நாட்டு மாடுகளின் சிறப்பை தமிழர்கள் பறைசாற்றி வருகின்றனர்.
மேலும், வெளிநாட்டு நிறுவனங்களின் பால் பொருட்களை வாங்காதீர்கள் என்றும், அதில் சர்க்கரை நோய் வருவதற்கு வாய்ப்புள்ளதாகவும், நாட்டு மாடுகளின் பாலில் எந்த வித நோய்களும் வராது. இவற்றில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளது எனவும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இதனை நிரூபிக்கும் விதமாக தற்போது வாட்ஸ்அப்பில், கோக்க கோலா நிறுவனத்தின் ‘வீவா மில்க்’ பாக்கெட்டுகளை வாங்காதீர்கள் எனவும், அவை பன்றி மரபணுவில் உருவான பசுமாடுகளிலிருந்து எடுக்கப்படும் பாலைத்தான் விற்பனை செய்கிறார்கள் என அதிர்ச்சி தரும் தகவல் மற்றும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
ஏற்கெனவே ஜெர்சி மாடுகளின் பாலில் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாததால் பலவிதமான நோய்கள் வர வாய்ப்புள்ளதாம், இதற்காக வெளிநாடுகளிலிருந்து மருந்துகள் நம் நாட்டிற்கு சப்ளை செய்து இலாபம் ஈட்டுவதாகவும் மக்கள் புலம்பி வருவது குறிப்பிடத்தக்கது.
நாம் என்ன செய்வது.. உண்மையா? பொய்யா? என ஒன்றும் புரியாத நிலையில் மக்களே சற்று உஷாராக இருப்பதுதான் நல்லது.