விவசாயநிலங்களை வீட்டு மனைகளாக போட்டு விற்கப்படுவதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில், பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு தற்போது, சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது .இதன் விளைவாக , விவசாய நிலங்களை , மனைகளாக போட்டு விற்கப் படுவதற்கு தொடர்ந்து தடை நீடித்து வந்தது .
வழக்கு விசாரணை :
இந்நிலையில் இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதி மன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் பத்திரபதிவுக்கு தொடர்ந்து தடை விதித்து உள்ளனர்.. மேலும், இது குறித்த விசாரணையை வரும் பிப்ரவர் 27 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது உயர்நீதிமன்றம் .
தமிழக அரசுக்கு கால அவகாசம் :
பத்திர ப்பதிவு தடையால் , மக்கள் பாதிப்படைவதை அறிந்து தமிழக அரசுதான் விரைந்து முடிவெடுக்க வேண்டும் என கூறி, மேலும் 3 வார கால அவகாசத்தை வழங்கி வழக்கை ஒத்திவைத்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்
மேலும், விவசாய நிலங்களை அரசுதான் விரைவில் வகைபடுத்தி, அதற்கான இறுதிக்கட்ட முடிவை எட்ட வேண்டும் என விளக்கம் அளித்துள்ளது உயர்நீதிமன்றம் .
இதன் மூலம் , விவசாய நிலங்களை வீட்டு மனைகளாக போட்டு விற்பதற்கு தொடர்ந்து தடை நீடிக்கிறது என்பது குறிபிடத்தக்கது.