செவ்வாய், 31 ஜனவரி, 2017

முதல் பட்ஜெட்டைத் தாக்கல் செய்த தமிழ்நாட்டுக்காரர்

Chetty

சுதந்திர இந்தியாவின் முதல் பட்ஜெட்டைத் தாக்கல் செய்தவர் தமிழ்நாட்டுக்காரர்.
பொருளாதார நிபுணரும் வழக்கறிஞருமான கோவையைச் சேர்ந்த சண்முகம் செட்டிதான் இந்தியாவின் முதல் பட்ஜெட்டைத் தாக்கல் செய்தவர். சண்முகம் செட்டி நீதிக்கட்சிக்காரர்.
பிரிட்டீஸ் ஆதரவு கட்சி என்று பெயர் பெற்ற நீதிக்கட்சியைச் சேர்ந்த சண்முகம் செட்டி சுதந்திர இந்தியாவின் முதல் பட்ஜெட்டைத் தாக்கல் செய்தது ஒரு ஆச்சரியமான நிகழ்வு. சண்முகம் செட்டியின் பொருளாதார மேதைமையைப் பார்த்து, அவர்தான் சுதந்திர இந்தியாவின் நிதியமைச்சராக இருக்கத் தகுதி படைத்தவர் என காந்தி முடிவு செய்தார்.
சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவுக்கு இதில் உடன்பாடு இல்லை என்றாலும், காந்தியின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக சண்முகம் செட்டியை தனது அமைச்சரவையில் நிதியமைச்சராக்கினார். சண்முகம் செட்டி 1947 நவம்பர் 26ம் தேதி முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். கோவையில் பிறந்த சண்முகம் செட்டி சென்னை கிறிஸ்தவ கல்லூரியிலும் சென்னை சட்டக் கல்லூரியிலும் படித்தவர்.