செல்லாத நோட்டு அறிவிப்பிற்கு பிறகு மக்கள் தங்களிடம் இருந்த பணத்தை வங்கிகளில் டெபாசிட் செய்தனர்.
கருப்பு பண முதலைகள் பினாமிகள் பெயரில் டெபாசிட் செய்தன. இத்தனை நாட்களாக காய்ந்து போன கணக்குகளில் கூட பணம் நிரம்பி வழிகிறது.
இந்நிலையில் சுமார் 18 லட்சம் பேர் தங்களது அறியப்பட்ட வருவாயைவிட அதிக தொகையை வங்கிகளில் டெபாசிட் செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
3 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்தவர்கள் கூட இந்த சந்தேக வளையத்தில் உள்ளனர். அதுபற்றிய தகவல்…
1) வங்கிகளில் பணம் செலுத்தியுள்ள 18 லட்சம் பேர் மீது சந்தேகம் எழுந்துள்ளது.
2) அவர்களில் 5 லட்சத்திற்கு மேல் செலுத்தியவர்கள் உட்பட அனைவருக்கும் அவர்களது வருமானம் குறித்து கேள்வி கேட்டு மத்திய அரசின் நேரடி வரிகள் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
3) அவர்கள் 10 நாட்களுக்குள் பதில் அளித்து விட்டால், மேல் நடவடிக்கையை தவிர்த்துக் கொள்ளலாம்.
4) இந்த நடவடிக்கைகளுக்கு பெயர் Operation Clean Money/Swachh Dhan Abhiyan
5) இந்த நடவடிக்கைகளுக்கு உதவியாக புதிய சாஃப்ட்வேர் உருவாக்கப்பட்டுள்ளதாக வருவாய்துறை செயலாளர் Hasmukh Adhia தெரிவித்துள்ளார்.
6) வருமான வரித்துறையின் இணையதளத்தில் தங்களது பதிலை தெரிவிக்கலாம் என மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் தலைவர் Sushil Chandra தெரிவித்துள்ளார்.
7) வரி செலுத்துபவர்களை அலைக்கழிக்காமல் இருக்கும் வகையில் நடவடிக்கைகள் இருக்கும் என்று வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது.