இன்று பார்லிமெண்ட்டில் பட்ஜெட் கூட்டத்தொடர் ஆரம்பமாகிறது. இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி உரையாற்றுகிறார். பின்னர் பொருளாதார ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்படுகிறது.
வழக்கமாக பிப்ரவரி மாத இறுதியில் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி அடுத்த நிதி ஆண்டுக்கான பட்ஜெட் சமர்ப்பிக்கப்படும். இது ஆங்கிலேயர் காலத்தில் இருந்து பின்பற்றி வரப்படும் நடவடிக்கை. இந்த நடைமுறையை மாற்றி மோடி அரசு இந்த ஆண்டில் இருந்து ஜனவரி மாத இறுதியில் பட்ஜெட் கூட்டத்தொடரை தொடங்கி அடுத்த (2017-18) ஆண்டுக்கான பட்ஜெட்டை ஏப்ரல் மாதத்தில் தொடங்க வசதியாக முன் கூட்டியே நடத்த திட்டமிட்டது.
அதன்படி இன்று பார்லிமெண்ட் கூட்டம் தொடங்கும். இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி உரையாற்றுகின்றார். பின்னர் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது.
நாளை (பிப் 1) நிதி அமைச்சர் அருண் ஜெட்லி பொது பட்ஜெட்டை தாக்கல் செய்வார். இந்த ஆண்டு முதல் ரயில்வே பட்ஜெட் பொது பட்ஜெட்டுடன் இணைக்கப்படுகிறது. கடந்த காலங்களில் ரயில்வே துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வந்தது. அந்த நடைமுறையும் மோடி அரசு மாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.