திங்கள், 30 ஜனவரி, 2017

இன்னும் 10 வருடத்தில் லஞ்சம் ஊழலை தமிழக இளைஞர்கள் முற்றிலும் விரட்டி விடுவார்கள் – சகாயம் ஐஏஎஸ் சொல்கிறார்


அடுத்த 10 ஆண்டுகளுக்குள் லஞ்சம் மற்றும்  ஊழலை தமிழகத்தை விட்டு இளைஞர்கள் முற்றிலும் அகற்றிவிடுவார்கள் என ஐஏஎஸ் அதிகாரி சகாயம் உறுதிபடத் தெரிவித்துள்ளார். இதற்கான பணிகளை அவர்கள் தொடங்கிவிட்டார்கள் என்றும் கூறினார்.
மக்கள் பாதை என்ற அமைப்பபின்  சார்பில், விழுப்புரத்தில் முப்பெரும் விழா நடைபெற்றது. 
இதில், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற சகாயம் ஐஏஎஸ்,மாற்றுத்திறனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கியதுடன், ஆசிய பீச் கபடிப் போட்டியில் 
தங்கப் பதக்கம் வென்ற விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த அந்தோணியம்மாள்என்ற மாணவியை பாராட்டினார்.
இதைத் தொடர்ந்து பேசிய அவர், கடந்த 2010-ஆம் ஆண்டு செப்டம்பர் 5-ஆம் தேதி நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவராக பணியாற்றியபோது, கல்லூரி விழாவில் பங்கேற்கராசிபுரம் சென்றபோது இரு இளைஞர்கள் பைக்கில் சற்று தடுமாற்றத்துடன் சென்றதாக குறிப்பிட்டார்.
அவர்களை நிறுத்தி சோதனை செய்தபோது, இருவரும் மது அருந்தியிருப்பது தெரிய வந்தது. 
அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முனைந்தபோது ஓர் இளைஞர் என்னிடம் 100ரூபாய் லஞ்சம்
 கொடுத்து நடவடிக்கை வேண்டாம் என கேட்டக் கொண்டார்.
 நேர்மையான சமூகமாக மாறாதா என ஏங்கும் எனக்கே அந்த இளைஞர் லஞ்சம் கொடுக்க
முன்வந்தது எனக்கு மிகுந்த மன வலியை தந்ததாக குறிப்பிட்ட அவர்,எனது 24ஆண்டு காலப் பணியில் 24 முறை மாறுதல் பெற்றாலும், என் நேர்மை
 மீது வெறுப்பு வரவில்லை என குறிப்பிட்டார்.
 இந்தச் சமூகம் ஏற்றம் பெறாமல் போனதற்கு லஞ்சமும் ஊழலுமே காரணம். என்ற சகாயம்,அடுத்த 10 ஆண்டுகளில் லஞ்சத்தை இளைஞர்கள் அப்புறப்படுத்தி விடுவார்கள் என்று கூறினார்.
தற்போது தமிழர்கள் நேர்மைக்கு ஆதரவாக போராடி வருவதாகவும், இளைஞர்களும்,
மாணவர்களும் கையில் எடுத்துள்ள இந்த அறவழி ஆயுதம் லஞ்சத்தையும், ஊழலையும் ஓட ஓட
விரட்டிவிடும் என உறுதிபடத் தெரிவித்தார்