திங்கள், 30 ஜனவரி, 2017

ஊடகங்கள் எதை வேண்டுமானாலும் எழுதிக்கொள்ளுங்கள்… பட்ஜெட் கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்” – மம்தா சவால் !

பிப்ரவரி 1-ந்தேதி நடக்கும் பட்ஜெட் தாக்கலின் போது மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பங்கேற்காது என்று அந்த கட்சியின் மூத்த தலைவரும், எம்.பி.யுமான டேரீக் ஓ பிரையன் தெரிவித்தார்.
சிட்பண்ட் ஊழல் வழக்கில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.கள் 2 பேரை சி.பி.ஐ. கைது செய்தது, மற்றும் ரூபாய் நோட்டு தடைக்கு எதிர்ப்பு ஆகிய காரணங்களால்  பாரதியஜனதா கட்சி மீது கடும் அதிருப்தியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி உள்ளது.
அதனால், இன்று நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் கூட திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பங்கேற்கவில்லை. 
இந்நிலையில்,  எம்.பி. டேரீக் ஓ பிரையன் கூறுகையில், “ நாங்கள் இன்று(நேற்று) நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்திலும் பங்கேற்கவில்லை. அதேபோல, பட்ஜெட் தாக்கலாகும் பிப்ரவரி 1-ந்தேதியும் பங்கேற்கமாட்டோம்.
ஏனென்றால், பிப்ரவரி 1-ந்தேதி அன்று மேற்குவங்காளத்தில் சரஸ்வதி பூஜை கொண்டாடப்படுகிறது. அன்று பணிகள் அனைத்தையும் ஒதுக்கிவைத்து வைத்து பூஜையில் ஈடுபடுவோம்.  மதங்களைக் கடந்த பண்டிகையாகப் பார்க்கிறோம்.
சமூக கலாச்சார விழாவாகும். அனைத்து கட்சிக் கட்சி கூட்டம் நடத்துவதற்கு 10 நாட்களுக்கு முன்பே எங்கள் கட்சியின் தலைவர் மம்தாபானர்ஜி 10 நாட்களுக்கு முன்பே கட்சியின் எம்.பி.கள் கூட்டத்தை கூட்ட திட்டமிட்டு விட்டார்.
இதில் கருத்து தெரிவிக்க ஒன்றும் இல்லை. ஊடகங்களுக்கு என்ன எழுதவேண்டுமோ எழுதிக்கொள்ளுங்கள் ” எனத் தெரிவித்தார்.