செவ்வாய், 31 ஜனவரி, 2017

நாட்டு மாடுகளை காக்கும் இளைஞர்கள்

Cow

நாட்டு மாடுகளை பாதுகாக்கும் புதிய முயற்சியில் திருச்சியை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் ஈடுபட்டுள்ளனர்.
திருச்சி மணிகண்டம் அருகே உள்ள கோலார்பட்டியை சேர்ந்த மதன் மற்றும் ஆனந்தன் ஆகியோர், 15 ஏக்கர் பரப்பளவில் இயற்கை முறையில் விவசாயம் மேற்கொண்டு வருகிறார்கள். விவசாயத்தில் முக்கிய பங்கு வகிக்கும் நாட்டு மாடுகளின் முக்கியத்துவத்தை உணர்ந்து, இவர்கள், கடந்த 6 மாதங்களாக நாட்டு மாடு வகைகளை பாதுகாக்கும் முயற்சியில் களமிறங்கியுள்ளனர்.
பால் விற்பனையும், இயற்கை உர தயாரிப்பும்
“நலம் நாட்டுப்பசும்பால் மையம்” என்ற பெயரில் விவசாய நிலங்களுக்கு நடுவே பண்ணை அமைத்து சுமார் 100 மாடுகளை இவர்கள் பராமரித்து வருகிறார்கள். தமிழகத்தில் இருந்த மொத்தம் 30 வகை நாட்டு மாடுகளில் 15 வகைகள் அழிந்து விட்டன. அதில் தற்போது உள்ள ஆலம்பாடி, உம்பலச்சேரி, மயிலை வகைகளை இவர்கள் வளர்த்து வருகின்றனர். இதில் கிடைக்கும் பாலில் சிறு துளி தண்ணீர் கலக்காமல் ஏறத்தாழ 60 வீடுகளுக்கு விநியோகம் செய்து வருகின்றனர். ஒரு லிட்டர் பால் 110 ரூபாய்க்கு விற்பனை செய்கிறார்கள்.
இவர்கள் ஜெர்சி இன மாட்டு பால் தீமைகளை எடுத்துரைத்தும் ,நாட்டு மாட்டுப்பால் முக்கியத்துவத்தையும் இணைய தளம் வாயிலாக வலியுறுத்துகின்றனர். லாபம் என்பதை விட, மக்களுக்கு நாட்டு மாட்டு பாலின் பலன்கள் கிடைக்க வேண்டும் என்ற கொள்கையுடன் பயணத்தை தொடர்கின்றனர் இரு சகோதரர்களும்.