செவ்வாய், 31 ஜனவரி, 2017

மருத்துவர்கள் அறிக்கை..

திருப்பூர் பாஜக நிர்வாகி முத்து கொலை செய்யப்படவில்லை, தற்கொலை செய்து கொண்டார் -மருத்துவர்கள் அறிக்கை.....!!
பாஜகவின் திருப்பூர் மாவட்ட துணை தலைவர் மாரிமுத்து கொலை செய்யப்பட்டதாக பாஜகவினர் கூறிவந்த நிலையில் முத்துவின் உடலை பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்கள் முத்து கொலை செய்யப்படவில்லை என்றும், தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறியுள்ளனர்.
முத்துவின் உடலில் சிறிய அளவிலான காயங்கள் கூட இல்லை. எனவே அவர் கொலை செய்யப்பட்டிருக்க வாய்ப்பே இல்லை என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், முத்துவுக்கு பெண் ஒருவருடன் தவறான பழக்கம் இருந்து வந்ததாகவும், அந்த விஷயம் வீட்டுக்கு தெரிந்ததால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்றும் திடுத்திடும் தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலையை கொலை எனச்சொல்லி, பதற்றத்தை உருவாக்கியது யார்? எதற்காக இப்படிச்செய்தார்கள் என்பது தொடர்பாகவும் காவல்துறையனர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாஜக, இந்து முன்னணி நிர்வாகிகள் கள்ளத்தொடர்பு, கட்டபஞ்சாயத்து, ரியல் எஸ்டேட் தகராறு போன்ற காரணங்களால் உயிரிழந்து வருகின்றனர்.
Image may contain: 1 person, smiling, text