பேப்பரில் பிரின்ட் செய்யப்பட்ட, அட்டையில் உள்ள ஆதார் அடையாள அட்டை மட்டுமே அதிகாரப்படியாக செல்லுபடியாகும். பிளாஸ்டிக் அல்லது ஸ்மார்ட்கார்டுகள் மூலம் பிரின்ட் செய்யப்பட்ட ஆதார் அடையாள அட்டைகள் ஒருபோதும் செல்லாது என்று ஆதார் வழங்கும் யு.ஐ.டி.ஏ.ஐ. அமைப்பு புதியஅறிவிப்பை வெளியிட்டுள்ளது.
எச்சரிக்கை
ஆதார் அடையாள அட்டையை பிளாஸ்டிக் கார்டுகளில் அச்சடித்து தருகிறோம் என்று ரூ. 50 முதல் ரூ.200 வரை கொடுத்து பொதுமக்கள் ஏமாற வேண்டாம் அந்த வகையான கார்டுகள் ஒருபோதும் செல்லாது என்றும் அந்த அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து ஆதார் அட்டை வழங்கும் யு.ஐ.டி.ஏ.ஐ. அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி அஜய் பூஷன் பாண்டே விடுத்த அறிவிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது-
பயன்பாடு
யு.ஐ.டி.ஏ.ஐ. அமைப்பு வழங்கிய ஆதார் அட்டையில் வெட்டிக் கொள்ளக்கூடிய பகுதி எனக் கூறப்பட்டுள்ள பகுதி, அல்லது இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்டு காகிதத்தில் பிரின்ட் செய்யப்படும் ஆதார் ஆகியவை மட்டுமே அனைத்து பயன்பாட்டுக்கும் பயன்படுத்த முடியும்.
தேவையில்லை
ஒரு நபரிடம் பேப்பர் வடிவத்தில் ஆதார் கார்டு இருந்தால், அவர் மேற்கொண்டுலேமினேஷன் செய்யல்பட்ட அல்லது ஸ்மார்ட், அல்லது, பிளாஸ்டிக் ஆதார் கார்டுவைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. இதற்காக மக்கள் தனியாக பணம் செலுத்த வேண்டாம். ஆதார் அமைப்பில், பிளாஸ்டிக், ஸ்மார்ட் கார்டு என்ற ஒரு திட்டம் இல்லை.
ஆதலால், பிளாஸ்டிக் ஆதார் கார்டுகளைப் பெற, பொதுமக்கள் தங்களின் ஆதார் விவரங்களையும், தனிப்பட்ட விவரங்களையும் அங்கீகாரமற்ற நிறுவனங்களிடம் தெரிவிக்க வேண்டாம்.
குற்றம்
பொதுமக்களிடம் இருந்து அங்கீகாரமற்ற நிறுவனங்கள் பிளாஸ்டிக் ஆதார் அட்டைபிரின்ட் ெசய்து தருகிறோம் என்ற பெயரில், ஆதார் விவரங்கள், தனிப்பட்ட விவரங்களை சேகரிக்க கூடாது. அவ்வாறு விவரங்களை சேகரிப்பது தண்டனைக்குரிய குற்றச்செயலாகும்.
பிளாக் அன்ட் வொயிட்
ஆதார் அட்டை வண்ணத்தில் தான் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. கருப்பு வெள்ளையில்(பிளாக் அன்ட் வொயிட்)கூட ஆதார் அட்டையை பிரின்ட் செய்து மக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். அதை பிளாஸ்டிக் கார்டுகளாகவோ, அல்லதுலேமினேட் செய்யவோ தேவையில்லை. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.