ஞாயிறு, 29 ஜனவரி, 2017

ஓட்டல்களில் கோக், பெப்சிக்கு தடை : தீயாய் எரிகிறது மாணவர்களின் எண்ணம் –

தமிழ மாணவா்கள், இளைஞா்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு போராடியது உலக வரலாற்றில் இடம் பிடித்துள்ளது.
அவா்கள் ஜல்லிக்கட்டு வேண்டும் என்று போராட வந்தனா். ஜல்லிக்கட்டுக்கு தடைவிதித்த பீட்டாவை தடை செய்ய வேண்டும்.
அமெரிக்காவில் உருவான பீட்டாவும் வேண்டாம். அங்கிருந்து உருவான கோக், பெப்சியும் வேண்டாம் என்றனா்.
இந்த கோஷங்கள் தமிழகம் முழுவதும் தீயாய் கொளுந்துவிட்டு எரிகிறது. வணிகா்களின் பேரபைப்பின்  நிறுவனர் விக்ரமராஜா, வணிக சங்கங்களின் தலைவா் வெள்ளையன் ஆகியோர் வரும் 1ம் தேதியில் இருந்து கோக், பெப்சி வாங்க வேண்டாம் என்று சங்கங்களுக்கு அறிவுறுத்தினர்.
தமிழக சமையல் கலைஞா்களின் கூட்டமைப்பும், இனி விசேஷங்களில் பயன்படுத்த மாட்டோம் என்று கூறியிருந்தனா்.
சினிமா தியோட்டா்களில் தற்போது இளநீர், மோர் போன்றவைகள் விற்க தயாராகி விட்டனா்.
இது தற்போது கடலூரில் உள்ள ஒரு திரையரங்கில் அமலில் உள்ளது. இந்த வரிசையில் தமிழக ஓட்டல்களும் இறங்க தயாராகிவிட்டன.
திண்டுக்கல்லில் உள்ள பாலாஜிபவன் என்கிற ஓட்டலில் கோக், பெப்சிக்கு தடை என்று போர்டு வைத்துள்ளனா்.
இது போன்று அனைத்து ஓட்டல்களிலும் இந்த நிலைதான் வரும் என்றும் கூறிவருகின்றனா்.
தற்போது இளைஞா்களின் எண்ணத்தை தமிழ மக்கள் ஏற்றுக் கொள்ள தயாராகிவிட்டனா்.
இதன் மூலம் விவசாயிகள் பயன்பெறுவா் அதற்காகத் தான் இந்த கோரிக்கைகளை வைத்ததாக இளைஞா்கள், மாணவா்கள் கூறுகின்றனா்.