ட்ரம்பின் முஸ்லிம் விரோதப்போக்கு...!
தடையை நீக்கியது நீதிமன்றம்...!
தடையை நீக்கியது நீதிமன்றம்...!
7 இஸ்லாமிய நாட்டவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைய தடை உத்தரவு பிறப்பித்து உத்தரவிட்டார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.
இதனையடுத்து அமெரிக்க மக்கள் Muslims are Welcome என்ற பதாகைகளோடும், ட்ரம்ப்பிற்கு எதிரான வாசகங்களோடும் போராட்டத்தில் குதித்தனர்.
டிரம்பின் அதிரடி உத்தரவு தொடர்பான விவகாரம் அமெரிக்காவின் நியூயார்க் நகரின் கிழக்கு மாவட்ட நீதிமன்றம் முன்னதாக சென்றது. இது தொடர்பாக விசாரணை நடத்திய நீதிபதி அன் டொனேலே டொனால்டு டிரம்பின் தடை உத்தரவை நிறுத்தி உத்தரவு பிறப்பித்தார். இதனையடுத்து அமெரிக்காவில் பயணிகள் தரையிறங்க அனுமதி கிடைத்து உள்ளது. அமெரிக்க விமான நிலையங்களில் சிக்கியிருக்கும் வெளிநாட்டவர்கள் மற்றும் அகதிகளை வெளியேற்றும் பணியை நிறுத்துமாறு அமெரிக்க அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
தம் வாய்களைக் கொண்டே அல்லாஹ்வின் ஒளியை (ஊதி) அணைத்துவிட அவர்கள் விரும்புகின்றார்கள் - ஆனால் காஃபிர்கள் வெறுத்த போதிலும் அல்லாஹ் தன் ஒளியை பூர்த்தியாக்கி வைக்காமல் இருக்க மாட்டான்.
- அல்குர்ஆன் : 9:32
-TNM Media