செவ்வாய், 17 ஜனவரி, 2017

சிரிய மக்களுக்கு உதவிக்கரம் நீட்டும் குவைத் தமிழ் இஸ்லாமிய சங்கம்

Kuwait

உள்நாட்டுப்போரால் பாதிக்கப்பட்டுள்ள சிரியாவில் சிக்கி உள்ள லட்சக்கணக்கான மக்களுக்கு குவைத் தமிழ் இஸ்லாமிய சங்க‌ம் சார்பில் நிவாரணப்பொருட்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.
குவைத் தமிழ் இஸ்லாமிய சங்கத்தின் கோரிக்கையை ஏற்று குவைத் வாழ் தமிழர்கள், பிற இந்தியர்கள், பிற நாட்டவர்கள் நிவாரணப்பொருட்களை வாரி வழங்கியுள்ளனர். 5 ஆயிரம் கிலோ ஆடைகள், உணவுப்பொருட்கள், குழந்தைகளுக்கான உடைகள், விரிப்புகள், காலணிகள், போர்வைகள் என ஏராளமான பொருட்கள் ‌பாதிக்கப்பட்டோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இவை, குவைத் பூப்யான் வங்கியின் துணை‌யுடன் குவைத் வளைகுடா அறிவியல் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்திடம் ஒப்படைக்க‌ப்பட்டன.