செவ்வாய், 17 ஜனவரி, 2017

தமிழகத்தை காவி நாடாக்க முயற்சி! பாஜக எங்களை அழிக்க நினைக்கிறது , சந்திக்க தயார் – எம்.நடராஜன் சவால்

அதிமுக ஆட்சியை கலைக்க எங்களை அழிக்க மத்தியில் ஆளும் பாஜக முயல்கிறது. அதை சந்திக்க நாங்கள் தயார் என்று எம்.நடராஜன் சவால் விட்டுள்ளார். குருமூர்த்தியை பற்றியும் விமர்சித்துள்ளார்.
தமிழகத்தில் நாள்தோறும் அரசியல் மாற்றங்கள் அடுத்தடுத்த என்ன என்கிற திகிலுடன் மாறி வருகிறது. திமுக , அதிமுக என கடந்த டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி முதல் அடுக்கடுக்கான மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன.
ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுக சசிகலாவின் கட்டுப்பாட்டுக்குள் வந்தாலும் , அதை கட்சியின் கடை கோடி தொண்டர்கள் ஏற்றுகொள்ளவில்லை. ஆங்காங்கே எதிர்ப்புகள் தலைதூக்க துவங்கி உள்ளன.
இந்நிலையில் சசிகலா குடும்பத்தினர் கட்சியை கைப்பற்றுவார்கள் ஆட்சியை கைப்பற்றுவார்கள் என்ற பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. சசிகலா தான் பிரதானம் என்று போஸ்டர் அடித்தனர். சசிகலா அடுத்த முதல்வர் என அமைச்சர்கள் கூறினர்.
இவை அத்தனையும் பொதுமக்களின் , தொண்டர்களின் கோபத்தை கிளறி உள்ளதாக உளவுத்துறை தகவல் வர உடனடியாக அனைத்தையும் நிறுத்திய சசிகலா எல்லாமே ஜெயலலிதாதான் என்று தெரிவித்தார். 
அதன் பின்னர் எல்லாமே மாறியது. ஜெயலலிதா ராஜினாமா செய்வதாக எழுதிய கடிதத்தை பிடுங்கி காப்பாற்றியது நான்தான். ஜெயலலிதா முதல்வராக பாடுபட்டது நான்தான்.
ஜெயலலிதாவை எனது மனைவி 36 ஆண்டுகளாக சுமந்து வாழ்ந்து வந்தார்.
ஜெயலலிதா மருத்துவமனையில் நல்ல சிந்தனையோடு இருந்தார். ஜெயலலிதா மரணம் குறித்து மருத்துவமனை அனைத்து தகவல்களையும் வெளியிட்டது.
முதலமைச்சராக வரும் வரை ஜெயலலிதாவை யாரும் ஏற்கவில்லை. அப்போது ஜனாதிபதியாக இருந்த வெங்கட்ராமன் கூட ஏற்கவில்லை. எம்.ஜி.ஆர்., மறைந்தபோது நாங்கள்தான் ஜெயலலிதாவுக்கு பாதுகாப்பாக இருந்தோம். 
 எனவே நாங்கள் குடும்ப அரசியல் செய்வோம், மாட்டேன் என்று சொல்லவில்லை. காங்கிரஸ் இயக்கத்தையே பார்த்தவன் நான். சாதி, மத வேறுபாடுகளை தூண்டி விட முயற்சிகள் நடக்கிறது. 
பாஜகவின் எதிர்ப்பை எதிர்கொள்ள நான் தயாராக இருக்கிறேன். அதிமுக ஆட்சியை கலைக்க பாஜக சதி செய்கிறது. தமிழகத்தை காவி மயமாக்கும் முயற்சி பலிக்காது. எங்களை அழிக்கப்பார்க்கிறார்கள்.
எங்களுக்கு எப்போதுமே போலீசார் பாதுகாப்பு அளித்தது இல்லை. ஆனால், குருமூர்த்தி பின்னால் எதற்கு அவ்வளவு போலீசார். அவரை நான் நேர் எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன் . இவ்வாறு அவர் பேசியுள்ளார். 
பாஜகவையும் மத்திய அரசையும் எம்.நடராஜன் விமர்சித்து பேசியுள்ளது. பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
http://kaalaimalar.net/mnatarajan-speech/