வெள்ளி, 3 மார்ச், 2017

கேரள முதலமைச்சர் பினராயின் தலைக்கு 1 கோடி ! RSS பயங்கரவாதிகள் அறிவிப்பு ! அதிர்ச்சி தகவல்


குந்தன் சந்திரவத் மேடையில் பேசிய போது, “அந்த குற்றவாளி, அந்த துரோகி, இந்துக்களின் ரத்தத்தில் சிவாஜியின் பெருமை இல்லை என்று எண்ணியுள்ளாரா, இந்துக்களுக்கு அது போன்ற உணர்வுகள் இல்லை என்று எண்ணி உள்ளாரா? நான், டாக்டர் குந்தன் சந்திரவத் இங்கு ஒன்றை கூறிக்கொள்கிறேன். என்னிடம் போதுமான அளவு சொத்து இருக்கிறது, அதனால் நான் இதனை தயிரியமாகவே கூறுவேன். என்னிடம் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான வீடு ஒன்று உள்ளது விஜயனின் தலையை வெட்டி என்னிடம் கொண்டு வாருங்கள். நான் என்னுடைய வீடு சொத்து அனைத்தையும் உங்களுக்கு தந்துவிடுகிறேன். இது போன்ற துரோகிகள் இந்த நாட்டில் வாழ தகுதியற்றவர்கள்.” என்று கூறியுள்ளார். இவர் தனது இந்த பேச்சின் மூலம் ஜனநாயக படுகொலை செய்து கொண்டிருக்கையில் இறுதியில் நகை முரணாக “இது போன்ற துரோகிகள் ஜனநாயகத்தை கொலை செய்ய தகுதியற்றவர்கள்” என்று கூறியுள்ளார்
source: v6 news, kaalaimalar