ஐதராபாத்: ஐதராபாத்தை சேர்ந்த அகஸ்தியர் ஜெய்ஸ்வால் என்ற 11 வயது சிறுவன் 12ம் வகுப்பு தேர்வை எழுதி வருகிறார். நான் 8 வயதில் 10ம் வகுப்பு தேர்வை நிறைவு செய்து விட்டேன். 10-வயதில் இடைநிலை படித்துக் கொண்டு இருந்தேன் என்று அகஸ்தியர் ஜெய்ஸ்வால் கூறியுள்ளார். மேலும் அவர் நான் குறுட்டுத் தனமாக மனப்பாடம் செய்ய மாட்டேன், பாடத்தை நன்கு புரிந்துக் கொண்டு, தேர்வு எழுதுவேன். எனக்கு ஐஏஎஸ் ஆக வேண்டும் என்பது நோக்கமாக உள்ளது என்றும் அகஸ்தியர் ஜெய்ஸ்வால் கூறியுள்ளார். தற்போது 11 வயது ஆகும் அகஸ்தியர் ஜெய்ஸ்வால், 12 வகுப்பு தேர்வை எழுதி கொண்டு இருக்கிறார்.
இவருடை குடும்பத்தில் இவர் மட்டும் அறிவாளி இல்லை, அகஸ்தியர் ஜெய்ஸ்வாலலை விட அவரது அக்கா மிகவும் புத்திசாலியாக இருக்கிறார்.
இவருடைய அக்காவான நைனா ஜெய்ஸ்வால், சர்வதேச டேபிள் டென்னிஸ் வீரர் ஆவர். மேலும் இவர் தனது 15 வயதில் உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் அரசியல் விஞ்ஞானத்தில் முதுகலை பட்டப்படிப்பு முடித்து விட்டார். தற்போது நைனா ஜெய்ஸ்வால் PhD படிப்பில் சேர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.