ஞாயிறு, 5 மார்ச், 2017

மேட்டூர் பகுதியில் பயங்கர வெடிகுண்டு சப்தம்! அணையை தகர்க்க நடந்த சதியா? மீத்தேன் பிரச்சனையை திசை திருப்ப முயற்சியா ?

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ளது மூலக்கடை கிராமம். மேட்டூர் அணையின் நீர்தேக்க பகுதியில் குறிப்பாக அணைக்கு அருகே உள்ளது இந்த மூலக்கடை கிராமம்.
இந்த கிராமத்தில் இன்று மாலை சுமார் நான்கு மணியளவில் திடீர் என்று பயங்கர வெடி சப்தம் கேட்டு உள்ளது. இந்த கிராமத்தில் மட்டுமல்லாமல் மேட்டூர் மூலக்கடை மற்றும் அதைச்சுற்றி சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவிற்கு இந்த சப்தம் உணரப்பட்டுள்ளது.
இதனால் அச்சமடைந்த அப்பகுதி கிராம மக்கள், வீடுகள் மற்றும் கடைகளில் இருந்து வெளியேறியவர்கள் எல்லாம் செய்வதறியாமல் திகைத்து நின்றனர். இந்த நிலையில், அந்த வழியாக ஜெட் விமானம் சென்றதாகவும், அந்த விமானத்தில் இருந்து விழுந்த மர்ம பொருள் வெடித்ததால் இந்த  சப்தம் ஏற்பட்டதாகவும் மூலக்கடை அருகே உள்ள தின்னப்பட்டி என்ற கிராம  மக்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் அந்த பகுதியில் கரும்புகை வெளியேறியதாகவும் கூறும் பொதுமக்கள்  மர்ம பொருள் என்னவென்று விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றனர்.
இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் மற்றும் வருவாய்துறையினரும் சம்மந்தப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தி வருகின்றனர். இருப்பினும் அப்பகுதியில் உள்ள மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.
குறிப்பாக மர்ம பொருள் விழுந்ததாக கூறப்படும் இடமானது, மேட்டூர் அணையின் நீர்தேக்க பகுதி மட்டுமல்லாமல், அணைக்கு அருகே இருப்பதால் அணைக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டு விடுமோ என்றும் அச்சப்படுகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

source; http://kaalaimalar.net/mettur-bomb-sound/