15/3/2017,
புதிய வாகனங்களை பதிவு செய்ய ஏப்ரல் 1ம் தேதி முதல் ஆதார் எண் கட்டாயம் என தமிழக போக்குவரத்து ஆணையர் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வாகன பதிவுகளை முறைப்படுத்தவும், இந்தியா முழுவதும் மற்ற மாநிலங்களுக்கிடையே தகவல்களை பகிர்ந்துகொள்ளும் வகையிலும் வாகன மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வாகன உரிமையாளர்களின் முகவரி, இரத்த வகை உள்ளிட்ட தகவல்களுடன் அலைபேசி, பான், ஆதார் எண்களை பதிவு செய்யும் வசதி உள்ளது என வும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே வரும் ஏப்ரல் மாதம் முதல் புதிதாக இரு சக்கர, மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் வாங்குவோர் ஆதார் எண், மொபைல் எண் மற்றும் பான் எண் ஆகியவற்றைக் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தவறும் பட்சத்தில் அந்த வாகனம் பதிவு செய்யப்படாது என்று தமிழக அரசின் போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.
இதனையடுத்து வாகன உரிமையாளர்களிடமிருந்து மேற்கண்ட தகவல்களை கட்டாயம் பெற வேண்டும் என அறிவுருத்தி போக்குவரத்து ஆணையர் தமிழகம் முழுவதுமுள்ள போக்குவரத்து அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.