15/3/2017,
அரசு மருத்துவமனைகளில் இருந்து, பிறந்த குழந்தைகளை கடத்துவதைப் போல, சுடுகாட்டிலிருந்து பிணங்களைக் கடத்தும் குற்றத்திற்குப் பின்னணியில் ஒரு பெரும் மாஃபியா கும்பல் செயல்படலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் மயானங்கள் மீது அரசின் கவனம் குவிய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்
பெரம்பலூரில் மந்திரவாதி கார்த்திக் என்பவர் வீட்டில் பெண் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. விசாரணையில் அந்த சடலம் மூன்று மாதங்களுக்கு முன்னால் இறந்த அபிராமி என்கிற பெண்ணுடையது என்பது தெரியவந்தது. இதனையடுத்து மந்திரவாதி கார்த்திக்கை கைது செய்து அவருக்கு பிணம் எப்படி கிடைத்தது என விசாரித்த போது போலீசாருக்கு பல அதிர்ச்சிகரமான தகவல்கள் கிடைத்தன. சென்னை மயிலாப்பூர் மயானத்தில் இருந்து அந்தச் சடலம் கடத்திக் கொண்டு வரப்பட்டதாக திடுக்கிடும் தகவலைச் சொல்லியிருக்கிறார் மந்திரவாதி.
இதனையடுத்து சென்னை மயிலாப்பூர் மயானத்தில் பிணம் கடத்தப்படுகிறதா என்பது குறித்து அறிய முதற்கட்டமாக அப்பகுதியில் உள்ள மக்களிடம் விசாரித்தபோது, மயான பூமிக்கு அருகில் வசிக்கும் பத்திரிகையாளர் திருமுருகன், மயானத்தில் இருந்து பிணங்கள் கடத்தப்படுவதாக வெளியாகியுள்ள செய்திகளால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளதாக தெரிவித்தார். மேலும் இதுபோல சம்பவங்கள் நடந்திருக்க வாய்ப்பிருப்பதாகவும் சந்தேகம் கிளப்புகிறார் அவர்.
ஆனால் பத்திரிகையாளர் திருமுருகன் எழுப்பிய சந்தேகம் குறித்து காவல்துறையினரிடம் கேட்ட போது கைலாசபுரம் சுடுகாட்டில் இருந்து பிணம் காணாமல் போவதாக இதுவரை எந்த புகாரும் வரவில்லை என்று தெரிவிக்கின்றனர். இந்நிலையில் இறந்த உடலின் அருகில் உறவினர் அல்லாதவர்கள் நெருங்க தயக்கம் காட்டும் நிலையில், சுடுகாட்டு ஊழியர்கள் பிணத்தை விற்கின்றனர் எனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மயிலாப்பூர் மயானத்தில் போதுமான பாதுகாப்பில்லை என அப்பகுதியில் வசிக்கும் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர். மயான பூமியில் இறந்த சடலத்துக்கு கூட பாதுகாப்பில்லை என கவலை தெரிவிக்கின்றனர். மயிலாப்பூர் மயானத்தில் மின்தகனப் பணிகள் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அரசு உடனடியாக இதனை திரும்பப் பெற்று, அந்தப் பணிக்கும் அரசு ஊழியர்களை நியமிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.