சனி, 4 மார்ச், 2017

பொய்ச் செய்திகளை வெளியிடுவதில் இந்திய ஊடகங்களுக்கு உலக அளவில் 2வது இடம்! த்து

பெரும்பாலான தேசிய ஊடகங்களின் பொய்ச் செய்திகள், பொய்ப் பிரச்சாரங்களின் காரணமாக இந்திய ஊடகங்களின் நம்பகத்தன்மை முற்றிலுமாக சீரழிந்துள்ளதாக உலக பொருளாதார மன்றம் எடுத்த ஆய்வில் தெரிவித்துள்ளது.
ஊடக நெறிமுறைகளையோ, சமூக பொறுப்போ இல்லாமல் கடந்த சில வருடங்களாகவே இந்திய ஊடகங்கள் செயல்பட்டு வருவதாக அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூக வலைதளங்களின் எழுச்சி காரணமாக ஊடகங்களின் இந்த போலி தன்மை வெளிப்பட்டு விட்டதாக அந்த ஆய்வறிக்கை கூறுகிறது. பத்திரிக்கையாளர்கள் என தங்களை கூறிக்கொண்டு, ஆதாயத்திற்காக அரசியல் கட்சிகளின் செய்தித் தொடர்பாளர்களைப் போல் சில பத்திரிக்கையாளர்கள் செயல்பட்டு வருவதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது.
நம்பகத்தன்மையற்ற நிறுவனங்களில் இந்திய ஊடகத்துறை இரண்டாம் இடம் வகிக்கிறது என்ற தலைப்பில் உலக பொருளாதார மன்றம் இந்த ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. எடல்மன் டிரஸ்ட் என்ற நிறுவனம் இந்த சர்வேயில் ஈடுபட்டது. இந்த நிறுவனம் கடந்த 20 வருடங்களாக ஊடகத்துறையில் கால்பதித்து வருவதோடு, 38 நாடுகளில் நிறுவனங்களை நடத்தி வருகிறது.
 ஊடகங்கள் மட்டுமின்றி வணிக நிறுவனங்கள், அரசு சார்பற்ற அமைப்புகள் (என்.ஜி.ஓ) ஆகியவற்றின் நம்பகத் தன்மை பற்றியும் இந்த நிறுவனம் ஆய்வு நடத்தியுள்ளது. நம்பகத்தன்மையற்ற ஊடகங்கள் உள்ள நாடுகளில் முதல் இடத்தில் ஆஸ்திரேலியா உள்ளது. இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது. 3வது இடத்தில் அயர்லாந்தும், 4வது இடத்தில் சிங்கப்பூரும், 5வது இடத்தில் துருக்கியும் உள்ளன. உலகின் 3ல் 2 பங்கு நாடுகளில் ஊடகங்கள் பற்றி மக்கள் எதிர்மறையான கருத்துக்களையே தெரிவிக்கின்றனர்.
ஒரு சம்பவம் நடக்கும் போது, தங்களது டி.ஆர்.பி ரேட்டிங்கை அதிகப்படுத்தவும், சுய நலன்களை நிறைவேற்றிக் கொள்ளும் நோக்கிலேயே செய்திகள் வெளியிடபடுவதால் அந்த செய்திகளை தாங்கள் நம்புவதில்லை என பெரும்பாலான மக்கள் தெரிவித்துள்ளனர்.

Related Posts: