சனி, 4 மார்ச், 2017

JNU வில் கண்ணையா குமார் இந்திய எதிர்ப்பு கோஷங்களை எழுப்பவில்லை: விசாரணை முடிவு! ABVP சதி அம்பலம்

ஜவஹர்லால் நேரு பல்கலைகழக வளாகத்தில் 2016 பிப்ரவரி மாதம் பாராளுமன்ற தாக்குதல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அப்சல் குரு தூக்கிலப்பட்ட தினத்தை ஒட்டி நடத்தப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் கண்ணையா குமார் இந்திய எதிர்ப்பு கோஷங்களை எழுப்பியதாக கூறப்பட்டு பெரும் சர்ச்சை உருவக்கப்பட்டது.

இதனையடுத்து கண்ணையா குமார், உமர் காலித், மற்றும் அனிர்பன் பட்டாச்சார்யா ஆகியோர் மீது தேச விரோத குற்றச்சாட்டுகள் பதியப்பட்டன. இதன் மீது நடத்தப்பட்ட விசாரணையில் கண்ணையா குமார் இந்திய எதிர்ப்பு கோஷங்களை எழுப்பவில்லை என்று தெரியவந்துள்ளது.
இந்த விசாரணைக்காக கண்ணையா குமாரின் குரல் நாற்ப்பது வீடியோ மாதிரிகளுடன் ஒப்பிடப்பட்டு சோதனை செய்யப்பட்டது. ஆனால் கண்ணையா குமாரின் குரலுக்கும் அந்த வீடியோவில் இந்திய ஏதிர்ப்பு கோஷம் எழுப்பிய குரலுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று விசாரணை முடிவில் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இந்த விசாரணையின் படி JNU மாணவர்களுக்கும் ABVP  இயக்கத்தினருக்கும் இடையே மோதல் ஏற்ப்பட்ட பிறகே கண்ணையா குமார் அந்த இடத்திற்கு வந்தடைந்தார் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
கண்ணையா குமாரின் குரலுடன் உமர் காலித், அனிர்பன் பட்டாச்சார்யா, மற்றும் ஏழு மாணவர்களின் குரல் மாதிரிகளும் தடவியல் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த விசாரணை அறிக்கையில் பல காஷ்மீரி மாணவர்களும் அந்த கூடத்தில் பங்கு பெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதே கூட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். இன் மாணவ அமைப்பான ABVP மைப்பை சேர்ந்தவர்களும் இருந்ததனர் என்பது குறிப்பிடத்தக்கது.

source: kaalaimalar