பல்வேறு கவர்ச்சிகரமான அறிவிப்புகளோடு வங்கி சேவையில் களமிறங்கியுள்ளது அஞ்சல்துறை.
தபால் சேமிப்புக் கணக்கில் குறைந்தபட்சம் 50 ரூபாய் இருந்தால் போதும். கட்டணம் இல்லாமல் நாடு முழுவதும் உள்ள அனைத்து வங்கி ஏடிஎம் மையங்களிலும் எத்தனை முறை வேண்டுமானாலும் பணம் எடுத்துக்கொள்ளலாம். பணப்பரிமாற்றம், எஸ்.எம்.எஸ் சேவை என எதற்கும் கட்டணம் இல்லை என தபால்துறை தெரிவித்துள்ளது. தேசிய மற்றும் தனியார் வங்கிகளில் சேமிப்பு கணக்கிலுள்ள பணத்திற்கு கொடுக்கப்படும் வட்டி சதவீதத்தை விட அஞ்சலக வங்கியில் அதிகம் வழங்கப்படுகிறது. விரைவில் ஆன்லைன் பணப்பரிமாற்றமும் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தபால்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதிவு செய்த நாள் : March 14, 2017 - 06:41 PM