தங்கச்சிமடம் மீனவர் பிரிட்ஜோ சுட்டுக் கொல்லப்பட்டதைக் கண்டித்து நாகை மீனவர்கள் தொடர்ந்து 7வது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
மீனவர் பிரிட்ஜோ மீது துப்பாக்கி சூடு நடத்திய இலங்கை அரசைக் கண்டித்தும், துப்பாக்கிச் சூடு நடத்திய அதிகாரி மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 138 விசைப்படகுகளை மீட்க வேண்டும், தமிழக அரசு ஏற்றிய டீசல் விலையைத் திரும்பபெற வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இன்று நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், காரைக்கால் மாவட்டங்களில் மீனவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர்.
பதிவு செய்த நாள் : March 13, 2017 - 08:52 AM