14/3/2017,
இந்தியாவில் இருக்கும் பிரிட்டீஷ் கம்பெனிக்கு சொந்தமான ரயில்பாதை ஒன்றில், ரயிலை இயக்குவதற்காக ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய்வரை கட்டணம் செலுத்திக்கொண்டிருக்கிறது இந்திய ரயில்வே.
இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு 1951 ஆம் ஆண்டே நாட்டில் உள்ள அனைத்து ரயில்பாதைகளும் தேசிய உடைமையாக்கப்பட்டுவிட்டது. ஆனால் 1921-ம் ஆண்டு சகுந்தலா ரயில்வேஸ் (தற்போது Killick-Nixon எனும் பெயரால் இயங்கிவருகிறது) எனும் பிரிட்டீஷ் நிறுவனத்தால் போடப்பட்ட மகாராஷ்ட்ராவின் அச்சல்ப்பூர் - யாவத்மால் பகுதிகளை இணைக்கும் ரயில்பாதை மட்டும் இதற்கு விதிவிலக்காகும். 190 கி.மீ தூரம்கொண்ட இந்த ரயில்பாதை மட்டும் இன்றும் சகுந்தலா ரயில்வேஸ் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது.
மகாராஷ்ட்ராவின் அமரவாதி மாவட்டத்தில் உள்ள மக்களின் போக்குவரத்திற்காக பெரிதும் பயன்படும் இந்த ரயில்பாதை, விதர்பா பகுதியின் ராணி எனவும் அம்மக்களால் அழைக்கப்படுகிறது. 4 மணி நேரத்தில் கடக்கக்கூடிய 190 கி.மீ தூரம் கொண்ட இந்த ரயில்பாதை நெடுகிலும் மலைகள், காடுகள் என இயற்கை சூழ்ந்த பகுதிகளாக இருப்பதால், இந்த வழியில் பயணம் செய்யும் மக்களுக்கு ஒரு ரம்யமான அனுபவத்தையும் பெற்றுவருகின்றனர். பிரிட்டீஷ் நிறுவனத்திற்கு சொந்தமான இந்த இருப்புப்பாதையில் ரயில்களை இயக்குவதற்காக ஆண்டுக்கு ஒருகோடி ரூபாய்வரை அந்நிறுவனத்திற்கு இந்திய ரயில்வே துறை ராயல்டி வழங்கிவருகிறது.