வெள்ளி, 17 மார்ச், 2017

​டீன் மன்னிப்பு கேட்டதையடுத்து பத்திரிகையாளர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

சென்னை அரசு மருத்துவமனையில் செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர் மீதான தாக்குதல் சம்பவம் குறித்து டீன் மன்னிப்பு கேட்டதையடுத்து பத்திரிகையாளர்கள் போராட்டத்தை கைவிட்டனர். 

சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர் மற்றும் ஒளிப்பதிவாளரை  தாக்கிய மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, சென்னை பத்திரிகையாளர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். 

இதனையடுத்து போராட்டத்தில் ஈடுப்பட்ட பத்திரிகையாளர்களுடன், மருத்துவமனை டீன் நாராயணசாமி பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டார். மேலும் செய்தியாளர் மீதான தாக்குதல் சம்பவத்துக்கு அவர் மன்னிப்பு கோரியதையடுத்து, பத்திரிகையாளர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டனர்.