தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள பல்வேறு நலத்திட்டங்களை ராமேஸ்வரம் மீனவர்கள் வரவேற்றுள்ளனர்.
தமிழக பட்ஜெட்டில் மீனவர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் தேசிய சேமிப்பு மற்றும் நிவாரணத் தொகை 4500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. விசைப்படகுகளுக்கு மாதந்தோறும் அரசு வழங்கும் டீசல் மானியம் 18 ஆயிரம் லிட்டராக உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும் இலங்கை கடற்படையால் பாதிக்கப்பட்ட 18 படகுகளுக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த அறிவிப்புகள் மீனவர்களிடையே பெரும் மகிழ்ச்சியையும், வரவேற்பையும் பெற்றுள்ளது.
மேலும் ராமேஸ்வரத்தில் பாதுகாப்பான மீன்பிடி துறைமுகம் அமைப்பது தொடர்பான அறிவிப்பு வெளியாகதாது ஏமாற்றம் அளிப்பதாகவும் மீனவர்கள் கூறினார்.