திங்கள், 6 மார்ச், 2017

அம்பானி, அதானி, மல்லையா கடனை வசூலிக்காத வக்கில்லாத அரசு, ஏழைகள் வயிற்றில் கைவைக்கிறது.! ஓர் அதிர்ச்சி தகவல்!

ஒரு 60 மாதங்கள் கொடுங்கள், இந்தியாவை மாற்றிக் காட்டுகிறேன் என்கிற கோஷத்தோடு கடந்த பாராளுமன்ற தோ்தலில்  மோடி களம் இறங்கினார்.
ஒரு டீக்கடைக்காரருக்கு ஏழை மக்களின் வாழ்க்கை நிலை தெரியாத இவா்தான், ஏழைகளை காக்க வந்த எஜமான் என்று தமிழகத்தை தவிர மற்ற இடங்களில் மோடி அலை அடித்தது. காங்கிரஸ் வீழ்ந்தது.
மல்லையா, அதானி, அம்பானிகளுக்கு கோடான, கோடி பணம் தள்ளுபடி செய்கிறது மத்திய அரசு, ஆனால் கல்விக்கடனைப் பெற்ற ஏழை மாணவர்களிடம் பணம் வசூல் செய்ய ரவுடிகளை வைத்து மிரட்டுகிறது.
இப்போது பெரிய பணக்காரா்களின் அரசாக மாறிவிட்டது பா.ஜ.க அரசு.தமிழகத்தில் காட்டை அழித்து ஆசிரமம் கட்டிய ஜக்கி வாசுதேவ் ஆசிரமத்திற்கு வந்து மணி அடித்து செல்கிறார் பிரதமா்.
தமிழகத்தில் விவசாயிகளின் பிரச்சனை எத்தனையே போ் எடுத்துச் சொல்லியும், பாலைவனமாகவேதான் தமிழகத்தை மாற்றுவேன் என்று அடம் பிடித்து வருகிறார் பிரதமா் மோடி.
இந்த நிலையில் ‘வங்கி சேமிப்பு கணக்கில் குறைந்தபட்ச இருப்பு தொகையாக ரூ.5 ஆயிரம் வைத்திருக்க வேண்டும். இதை பராமரிக்க தவறினால்  ஏப்ரல் 1ம் தேதி முதல் அபராதம் விதிக்கப்படும்’’ என்று ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது.
பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ  இது குறித்து வெளியிட்ட  அறிவிப்பு:
சேமிப்பு கணக்கில் குறைந்தபட்ச தொகை (மினிமம் பேலன்ஸ்) வைக்காத வாடிக்கையாளர்களுக்கு ஏப்ரல் 1ம் தேதி முதல் அபராதம்  விதிக்கப்படும்.
பெருநகரங்களில் இருப்பவர்கள் வங்கி கணக்கில் குறைந்தபட்ச தொகையாக ரூ.5000, நகரங்களில் இருப்பவர்கள் ரூ.3000,  புறநகர் பகுதிகளில் இருப்பவர்கள் ரூ.2000, கிராமப்புறங்களில் இருப்பவர்கள் ரூ.1000 என வைத்திருக்க வேண்டும்.
இந்த தொகை குறைந்தால்  அபராதம் விதிக்கும் நடைமுறை ஏப்ரல் 1ம் தேதி முதல் அறிமுகம் செய்யப்பட உள்ளது. குறைந்தபட்ச இருப்பு தொகையை விட கணக்கில் எவ்வளவு குறைந்துள்ளதோ அதன் அடிப்படையில் அபராதம் விதிக்கப்படும். 75  சதவீதத்திற்கும் குறைவாக இருந்தால் ரூ.75 அபராதத்துடன் சேவை வரியும் சேர்த்து வசூலிக்கப்படும்.
50 சதவீதத்திற்கும் குறைவாக  இருந்தால் ரூ.50 மற்றும் சேவை வரி அபராதமாக விதிக்கப்படும்.
சொந்த ஏடிஎம்களில் 10 முறை மட்டுமே இலவசமாக பணம் எடுக்கலாம்  என்ற நடைமுறையும் ஏப்ரல் 1 முதல் அறிமுகம் செய்யப்படும். இவ்வாறு தெரிவித்துள்ளது.

source: kaalaiamlar

Related Posts: