30 1 23
50,000 ஆண்டுகளுக்குப் பிறகு நமது சூரியக் குடும்பத்திற்கு வெளியிலிருந்து வால் நட்சத்திரம் ஒன்று பூமிக்கும், சூரியனுக்கு அருகில் நெருங்கி வந்து கொண்டிருக்கிறது. இது அரிய பச்சை நிற வால் நட்சத்திரம் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். வால் நட்சத்திரம் இந்தியா வான்பரப்பிற்கு மேலே வந்து கொண்டிருக்கிறது. பிப்ரவரி 1-ம் தேதியில் வானில் தென்படும் எனக் கூறியுள்ளனர். இந்தநிலையில், லடாக்கின் ஹான்லேயில் உள்ள இந்திய வானியல் ஆய்வகத்தில் இருந்து வானத்தில் இருந்த அரிய பச்சை நிற வால் நட்சத்திரத்தை வானியலாளர்கள் படம் பிடித்தனர். பூமியை நெருங்கி வருகையில் இன்னும் பிரகாசமாக தெரியும் என விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
C/2022 E3 (ZTF) என்று அழைக்கப்படும் வால் நட்சத்திரம் பூமிக்கு மிக அருகில் 42 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் வந்து செல்லும் என்று கூறப்பட்டுள்ளது. வால் நட்சத்திரம் பூமி மற்றும் செவ்வாய் கிரகத்தின் சுற்றுப்பாதைகளுக்கு இடையே மணிக்கு 2,07,000 கிலோமீட்டர் வேகத்தில் சென்று கொண்டிருந்தது. வால் நட்சத்திரங்கள் அழுக்கு பனிப்பந்துகள் என்று குறிப்பிடப்படுகின்றன. இவை நமது சூரிய குடும்பத்தின் உருவாக்கம் பற்றிய முக்கிய தடயங்களை வழங்கலாம்.
C/2022 E3 (ZTF) என்று அழைக்கப்படும் நீண்ட காலம் பயணிக்கும் வால் நட்சத்திரத்தை கடந்த மார்ச் மாதம் கால்டெக்கின் பாலோமர் ஆய்வகத்தில் மிக நீளமான கேமரா ஸ்விக்கி டிரான்சியன்ட் வசதியைப் பயன்படுத்தி விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். இந்த பச்சை வால்மீன் கிட்டதிட்ட பல ஆண்டுகளுக்கு முன் நவீன மனிதர்கள் பிறப்பதற்கு முன் நமது மூதாதையர்களான நியாண்டர்டால்கள் கிரகத்தில் இருந்த போது வந்தது எனக் குறிப்பிட்டனர்.
இந்த அரிய வகை வால் நட்சத்திரத்தை முழுமையாக காண விஞ்ஞானிகள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். பூமியை கடந்து இந்த வால் மீன் பிப்ரவரி 10-வாக்கில் செவ்வாய் கிரகத்தை அடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
source https://tamil.indianexpress.com/science/50000-years-older-rare-green-comet-looks-heavenly-from-ladakh-584870/