சனி, 18 மார்ச், 2017

வாகன காப்பீட்டு தொகை உயர்வுக்கு ஓட்டுனர்கள் கடும் அதிருப்தி!

வாகன காப்பீட்டு தொகை உயர்வுக்கு ஓட்டுனர்கள் கடும் அதிருப்தி!


18/3/2017, வாகனங்களுக்கான காப்பீட்டு தொகையை 40 விழுக்காட்டிற்கும் மேல் அதிகப்படுத்தப்படும் நடவடிக்கைக்கு வாகன ஓட்டுனர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

சாலையில் இயங்கக்கூடிய வாகனங்கள் அனைத்திற்கும் வாகன காப்பீடு ஆண்டுதோறும் செலுத்தவது கட்டாயம் என்ற நிலையில், காப்பீட்டை செலுத்ததாவர்களுக்கு போக்குவரத்துக் காவல்துறையினர் அபராதம் வசூலித்து வருகின்றனர். இந்த நிலையில் திடீரென்று 42.9 விழுக்காடு காப்பீட்டு கட்டணத்தினை காப்பீடு கட்டுப்பாடு மற்றும் மேம்பாட்டு ஆணையம் உயர்த்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இந்த திடீர் உயர்வால் வாகன ஓட்டுனர்கள் மற்றும் வாகன உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதற்கு ஆட்டோ தொழிற்சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.