சனி, 18 மார்ச், 2017

தமிழகம் முழுவதும் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற தீவிர நடவடிக்கை!

தமிழகம் முழுவதும் நீர்நிலைகளில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகப் பொதுப்பணித்துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் சுற்றுச்சூழல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது பேசிய வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினர் வாகை சந்திரசேகர், நீர்நிலைகளில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். 

அதற்குப் பதிலளித்த பொதுப்பணித்துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவின் அடிப்படையில், சீமைக்கருவேல மரங்களை அகற்றப் பரப்பரளவு கணக்கீடு மற்றும் அகற்றுவதற்கான செலவு மதிப்பீடு தயாரிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார். 

மேலும் ஆற்றோரம் உள்ள சீமைக் கருவேல மரங்கள் அகற்றப்பட்டு வருவதாகவும் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

Related Posts: