சனி, 11 மார்ச், 2017

CBSE 10–ம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் கல்வி ஆண்டு முதல் 6 பாடங்கள்

CBSE 10–ம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் கல்வி ஆண்டு முதல் 6 பாடங்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. CBSE தலைவர் ஆர்.கே.சதுர்வேதி CBSE பள்ளிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், CBSE 10–ம் வகுப்பு மாணவர்கள் 2017–2018-ம் கல்வி ஆண்டு முதல் 6 பாடங்களை படிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

அதாவது மொழிப்பாடம்–1, மொழிப்பாடம்–2, அறிவியல், கணிதம், சமூக அறிவியல் ஆகிய பாடங்களோடு கூடுதலாக தொழிற்கல்வி பாடம் ஒன்றையும் எடுத்து படிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். 

அறிவியல், கணிதம், சமூக அறிவியல் பாடங்களில் ஏதாவது ஒன்றில் தேர்ச்சி பெறவில்லை என்றால், அதற்கு பதிலாக விருப்பப்பாடம் பார்க்கப்படும் என்றும் அதில் தேர்ச்சி பெற்றிருந்தால் அந்த மாணவர் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார். தொழிற்கல்வி பாடத்தில் தகவல் தொழில்நுட்பம், சில்லரை வர்த்தகம், பாதுகாப்பு, ஆட்டோ தொழில்நுட்பம், சர்வதேச சுற்றுலா, அழகுக்கலை உள்ளிட்ட 13 வகையான படிப்புகள் உள்ளன.

http://ns7.tv/ta/tamil-news/tamilnadu/11/3/2017/6-subjects-will-be-there-next-academic-year