சனி, 15 ஜூலை, 2017

#இந்துத்துவ_வெறியர்களால்_உத்தரபிரதேசத்தில் ரயிலில் சென்ற #இஸ்லாமிய_குடும்பம்_மீது_கொலைவெறித் தாக்குதல்!

லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் ரயிலில் சென்றுகொண்டிருந்த இஸ்லாமியக் குடும்பத்தை கும்பல் ஒன்று தாக்கியுள்ளது. மேலும் பெண்களை பாலியல் வன்முறைக்கு ஆளாக்கியுள்ளது.
உத்தரப்பிரதேசம், காஸ்கஞ்ச் பயணிகள் ரயில் மோடா என்னும் ஊருக்கு அருகில் செல்லும் போது, இஸ்லாமியக் குடும்பத்தை ஒரு கும்பல் குறிவைத்துத் தாக்கியுள்ளது. அக்குடும்பத்தில் இருந்த பெண்களை பாலியல் வன்முறைக்கு ஆளாக்கியுள்ளது.
அந்தக் குடும்பத்தினர் உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு, ஊர் திரும்பும் போது இந்தக் கொடூரத் தாக்குதல் நடைபெற்றுள்ளது. ரயிலில் இருக்கும் அவசர கால கண்ணாடியை உடைத்து உள்ளே நுழைந்த கும்பல், அந்தக் குடும்பத்தினரை இரும்புக் கம்பியால் தாக்கியுள்ளது.
மேலும், அதில் #17_வயது_மாற்றுத்திறனாளி_இளைஞர்_இருந்துள்ளார். அவரையும் கூட அந்த கும்பல் விட்டு வைக்காமல் சரமாரியாகத் தாக்கியுள்ளது.
அதில் அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த அனைவரும் படுகாயம் அடைந்தனர்.
ரயில் பருக்காபாத் ரயில் நிலையத்தை அடைந்ததும் ரயில்வே அதிகாரிகள் அவர்களை மீட்டு மருத்துவ சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அவர்கள் இஸ்லாமியர் என்பதாலேயே தாக்குதலுக்கு ஆளானதாக அக்க்குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கூறினர்.

Related Posts: