சனி, 29 ஜூலை, 2017

​காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை எதிரொலி: மேட்டூருக்கு நீர்வரத்து அதிகரிப்பு July 29, 2017

​காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை எதிரொலி: மேட்டூருக்கு நீர்வரத்து அதிகரிப்பு


கர்நாடகாவில் இருந்து வரும் நீரின் அளவு அதிகரித்துக் கொண்டே வருவதால், மேட்டூர் அணையின் நீர் மட்டம் 3 நாட்களில் 4 அடி உயர்ந்துள்ளது.

காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து தமிழகத்திற்கு அதிக அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. 

மேட்டூர் அணைக்கு தொடக்கத்தில் வினாடிக்கு 200 கன அடியாக இருந்த நீர்வரத்து, தற்போது சுமார் 7 ஆயிரம் கன அடியாக உள்ளது. 

இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டமும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தற்போது நீர்மட்டம் 30 அடியைத் தாண்டியுள்ளது. கடந்த 3 நாட்களில் மட்டும் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 4 அடி வரை உயர்ந்துள்ளது.