திங்கள், 31 ஜூலை, 2017

காவிரி நீரிப்பிடிப்பு பகுதியில் மழை: மேட்டூர் அணைக்கு 7,000 கன அடி நீர்வரத்து..! July 31, 2017


​காவிரி நீரிப்பிடிப்பு பகுதியில் மழை: மேட்டூர் அணைக்கு 7,000 கன அடி நீர்வரத்து..!


மேட்டூர் அணையின் நீர் இருப்பு 9 மாதங்களுக்கு பிறகு 9.47 டிஎம்சி-யை எட்டியுள்ளது. 

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருதாலும், கர்நாடகா அணைகளில் தண்ணீர் திறப்பு அதிகரித்துள்ளதாலும், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 7,271 கனஅடியாக உயர்ந்துள்ளது. 

இந்நிலையில் நீர்வரத்தைவிட மேட்டூர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு குறைவாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. 

அணையின் நீர்மட்டம் தற்பொழுது 34.6 அடியாக உள்ளது. அணையில் இருந்து குடிதண்ணீருக்காக 500 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

Related Posts: