திட்டக்குடியை சேர்ந்த மாற்றுத்திறனாளி ஒருவர், அரசு உதவி கேட்டு ஆட்சியர் அலுவலகத்தில் பல முறை மனுக்கள் அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என வேதனை தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த ஆவட்டியை சேர்ந்தவர் செந்தில்குமார் மாற்றுத்திறனாளி.
செந்தில்குமாரால் சுயமாக நடக்க முடியாத நிலையிலும் டிப்ளமோ மற்றும் பி.ஏ தமிழ் பட்டம் பெற்றுள்ளார். தனது தாயாருடன் வறுமையில் வாடும் செந்தில்குமார், அரசு உதவிகேட்டு கடந்த 10 ஆண்டுகளாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்து வருகிறார்.
ஆனால், இதுவரை அவருக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை. உதவிக்கு யாருமற்ற நிலையில், மனுக்களை வாயில் கவ்விகொண்டு ஆட்சியர் அலுவலகம் சென்றது பார்ப்போரின் கல் நெஞ்சையும் கரைப்பதாக இருந்தது. தமது நிலையை கருத்தில்கொண்டு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என செந்தில்குமார் வலியுறுத்தியுள்ளார்.