உத்தரப்பிரதேச மாநிலத்தில் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த இரண்டு எம்ஏல்ஏக்களும், மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த ஒரு எம்எல்ஏவும் ராஜினாமா செய்துள்ளனர்.
புக்கல் நவாப் மற்றும் யஷ்வந்த் சிங் ஆகிய இருவரும் சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்தவர்கள், தாக்கூர் ஜெய்வீர் சிங் பகுஜன் சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் ஆவர்.
ராஜினாமா செய்தவர்களில் ஒருவரான யஷ்வந்த் சிங் கூறுகையில், “சில நாட்களுக்கு முன்னர் உத்தரப்பிரதேச சட்டப்பேரவையில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் அகிலேஷ் பேசிய போது, நம்மால் வெல்ல முடியாத தேசத்துடன் (சீனா) போரை தொடங்கவே கூடாது என கருதுகிறேன், நீங்கள் (பாஜக) 1962ல் இருந்த இந்தியா தற்போது அல்ல என கூறுகிறீர்கள், ஆனால் அதேபோல அவர்களும் அப்போது இருந்த சீனா அல்ல என்பதை நினைவில் கொள்ள வேண்டும், அவர்களின் வளர்ச்சி மற்றும் உள்கட்டமைப்பை ஒப்பிடும் போது நம்மால் அவர்களுடன் ஒப்பிட முடியாது: என கூறியிருந்தார்.
இக்கருத்து சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து அகிலேஷ் யாதவ் எந்தவொரு விளக்கமும் அளிக்கவில்லை, இது தன்னுடைய மனதை ஆழமாக பாதித்துவிட்டது என்றும், சீனாவை உயர்த்தியும், இந்தியாவை தாழ்த்தியும் அகிலேஷ் பேசியுள்ளது கண்டிக்கத்தக்கது, தேசத்திற்கு எதிரான கருத்துக்களை (அகிலேஷ்) கொண்டிருப்பதால் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்வதாகவும், முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு வழிவிடுவதாகவும் யஷ்வந்த் சிங் தெரிவித்தார்.
ஏனெனில் தற்போது முதல்வர் யோகி ஆதித்யநாத் எம்எல்ஏ வாக இல்லாமல் இருப்பதால் அவர் ஏதாவது ஒரு தொகுதியில் நின்று போட்டியிட்டு வெல்ல வேண்டும், அப்போது தான் அவரால் முதல்வர் பதவியில் நீடிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
ராஜினாமா செய்த மூவரும் விரைவில் பாரதிய ஜனதா கட்சியில் இணைய இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த அகிலேஷ் யாதவ் ஜனநாயகத்தை படுகொலை செய்யும் விதமாக பாஜக செயல்படுகிறது என்று கூறினார்.