சனி, 29 ஜூலை, 2017

​விமான பயணத்திற்கு ஆதார் எண்ணை கட்டாயம் ஆக்கும் திட்டம் இல்லை : மத்திய அரசு July 29, 2017

​விமான பயணத்திற்கு ஆதார் எண்ணை கட்டாயம் ஆக்கும் திட்டம் இல்லை : மத்திய அரசு


விமான பயணத்திற்கு ஆதார் எண்ணை கட்டாயம் ஆக்கும் திட்டம் இல்லை என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. 

விமான பயணத்திற்கு ஆதார் எண்ணை கட்டாயம் ஆக்க மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தலைமையிலான உள்துறை விவகாரங்களுக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவின் கூட்டம் நடைபெற்றது. 

இதில், ஆதார் நிறுவன உயர் அதிகாரிகள், மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் கலந்து கொண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் பதில் அளித்தனர். 

அப்போது, விமானத்தில் பயணம் செய்பவர்கள் டிக்கெட்டுகளை எடுக்க ஆதார் கட்டாயம் என்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது

Related Posts: