திங்கள், 31 ஜூலை, 2017

அலறிய Mark Zuckerberg..! உடனடியாக "AI" அமைப்பை செயலிழக்க செய்த FaceBook! July 31, 2017

முகப்பு தொழில்நுட்பம்
அலறிய Mark Zuckerberg..! உடனடியாக "AI" அமைப்பை செயலிழக்க செய்த FaceBook!
July 31, 2017
அலறிய Mark Zuckerberg..! உடனடியாக


மனிதர்கள் புரிந்துக் கொள்வதை தடுக்க FaceBook-ன் “செயற்கை நுண்ணறிவு” அமைப்பு தனக்கான பிரத்யேக மொழியை தானே உருவாக்கிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே உருவாக்கப்பட்ட உரையாடல் நிரல்களின் அடிப்படையில் இயங்கும் Chatbots எனப்படும் ‘உரையாடும் ஏஜெண்ட்’-களை பேஸ்புக் தனது பயனாளர்களுடன் உரையாடுவதற்கு  பயன்படுத்தி வருகிறது. இவை AI எனப்படும் ‘செயற்கை நுண்ணறிவு’ (Artificial intelligence) அடிப்படையில் தானாக இயங்கக் கூடியவை.

டெஸ்லா (Tesla) நிறுவனத்தின் CEO, Elon Musk இருதினங்கள் முன்பு, செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மிகமிக ஆபத்தான ஒன்று என்று தெரிவித்திருந்த நிலையில், ஆங்கிலத்திற்கு பதிலாக தனக்கான தனித்துவமான மொழியை உருவாக்கி பேச ஆரம்பித்த, AI தொழில்நுட்பத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட Chatbot ஒன்றை Facebook நிறுவனம் கண்டறிந்து செயலிழக்க செய்துள்ளது.

AI தொழில்நுட்பத்தின் அடிப்படையிலான இந்த Chatbot உலகெங்கிலும் உள்ள கணினிகளை செயலிழக்க செய்யாவிட்டாலும், தனக்கென பிரத்யேக மொழியை உருவாக்கிக் கொண்டது அதிர்ச்சி அளிப்பதாக Facebook மென்பொருள் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். நிலவரம் கையை மீறிப் போவதை உணர்ந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் அந்த Chatbot-ஐ செயலிழக்க செய்துள்ளனர். 

இச்சம்பவம் குறித்து அறிந்த Facebook நிறுவனரான Mark Zuckerberg அதிர்ச்சியடைந்ததாகவும், ஆயினும் இவ்விவகாரத்தின் தீவிரத்தை அவர் கண்டுகொள்ளவில்லை என்றும் குற்றம்சாட்டப்படுகிறது. இக்குற்றச்சாட்டை கூறுவதே Elon Musk தான்.